சுவாமிகளின் பிறப்பிடம்,குடும்பம், வயது ஏதும் யாரும்
அறிந்தாரில்லை.
சுவாமிகள் பிராம்மண குலத்தைச் சேர்ந்தவர்.
நல்ல அழகு.இடையில் கட்டியுள்ள வேஷ்ட்டியை
சணல் போன்று கிழித்து விடுவார்.
அவர் எப்போதும் தெய்வ நிலையில் இருந்த காரணத்தால்
தானாக உணவு உண்ண மட்டார். யாராவது எடுத்து
ஊட்டுதல் வேண்டும். எவரையும் கண்ணோடு கண்
நோக்கிப் பேச மாட்டார்.
சுவாமிகள் பரம்பொருளோடு தீவிரமாக தொடர்பு
கொண்டிருந்த காரணத்தால் அனைத்தும் அவரே ஆனார்.
சுவாமிகள் உடலோடு இருக்கும் போதே பரம்பொருளோடு
ஐக்கியமாகி விட்டார்.
சுவாமிகளுக்கு சமஸ்கிருத மொழி நன்றாக
தெரியும்.சுவாமிகளை, கணபதி சுவாமிகள்,குருநாத சுவாமிகள்
சுவாமினாத சுவாமிகள் எனப்பலப் பெயரிட்டு அழைத்தனர்.
சுவாமிகள் எப்பொழுதும்” பகவந்த”-”பகவந்த” என்று சொல்லிக்
கொண்டேயிருப்பார்.யாரையாவது ஆசிர்வாதம் செய்யும்பொழுது
”பகவந்தன் இருக்கிறான்- காப்பாற்றுவான்” என்று சொல்லி
ஆசிர்வதிப்பார்.
தன்னை அண்டினவருக்கு மோட்சத்தைத் தந்தருளும் ஆற்றல்
பெற்றவர்.கடும் தவப் பயனினால் ஆத்ம சுடர் ஒளிவிட்டு
பிரகாசித்தது.யோக சித்தி பெற்றவர்.சுவாமிகள் பரிபக்குவ
சாதகர்களை வலிய வந்து ஆட்கொள்வார்.நல்லவர்களை
துன்பத்திலிருந்து காப்பார். சுவாமிகள் அம்பிகைக்கு சமமானவர்
என்று சொல்லப்படுகிறது.
1879-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவாமிகள் பல ஊர்களைச்
சுற்றிவிட்டு, விருத்தாசலத்தில் ஒரு வீட்டு திண்ணையில்
அமர்ந்திருந்தார்.அப்பொழுது, தெய்வ சிகாமணி முதலியார்
என்பவர் அந்த வீட்டுக்கு குடிபுக வந்தார்.வந்தவர்,அமர்ந்திருந்த
சுவாமிகளைப் பார்த்து விட்டு-சிறிது உற்று நோக்கினார்.
சுவாமிகளும்,முதலியாரை 10 நிமிடம் உற்றுப் பார்த்தார்.
சுவாமிகளை, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி உருவத்தில் முதலியார்
அவர்கள் தன் கனவில் கண்டுள்ளதால்- சுவாமிக்கு பணிவிடை
செய்ய ஆரம்பித்தார்.
கடலூரிலுள்ள புதுப்பாளையம் என்னும் சிற்றூருக்கு சுவாமிகளை,
முதலியார் அழைத்து வந்தார்.அங்கேயே ஒருவருடைய
தோட்டத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்து, பக்தர்களுக்கு
ஆசி வழங்கி வந்தார். விஷம் தீண்டியவர்களை காப்பாற்றினார்.
நோயாளிகளின் குறை தீர்த்தார். பலருக்கு சந்தான விருத்தியை
தந்தருளினார்.
சுவாமிகள் பரம்பொருளோடு ஐக்கியமாவதற்கு 40 தினங்கள்
முன்னதாகவே உணவு உண்ணுவதை நிறுத்தினார்.
தெய்வ சிகாமணி முதலியார் இரவு 10 மணிக்கு
சாயுசிசியம் அடையும் தினத்தன்று கற்பூரத்தைக் கொளுத்தி
சுவாமிகளுக்கு காட்டினார்கள்.
அப்பொழுது சுவாமிகள் எழுந்து உட்கார்ந்து “ பல வழியில்
பாக்கியமில்லை-கச்சேரி வாசல் காத்திருந்தால் உண்டு.
ஒரு பயலும் வழிபட்ட பயலாயில்லை “ என்று பல தடவை
திருப்பி திருப்பி கூறினார்.மேலும் இங்கு அம்பாள்
பிரசன்னமாயிருப்பாள்.இங்கு ஒரு அற்புதம் நிகழும்.
இது அம்பிகையின் ஆலயமாகும்” என்று அருளினார்.
ஸ்ரீ பகவந்த சுவாமிகள்,1889-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி
இரவு 11 மணிக்கு பரம்பொருளோடு ஐக்கியமானார்கள்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூருக்கு அடுத்த புதுப்பாளையத்தில்
கெடில நதிக்கரையில் சுவாமிகளுக்கு சமாதி எழுப்பட்டது.
சுவாமிகளின் சமாதியில் ராஜராஜேஸ்வரி திரு உருவம்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.
திருமந்திரம்
0 comments:
கருத்துரையிடுக