சித்தர் ஸ்ரீ கணபதி சுவாமிகளின் குருபூஜை விழா

|


ஸ்ரீ  கணபதி சித்தரின் குருபூஜை





18-05-2013 அன்று ஸ்ரீ கணபதி சித்தரின்


குருபூஜை விழா சிறப்பாக நடக்க ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இடம்;- புதுவை, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை

குடிமை பொருள் வழங்கும் அலுவலகத்திற்கு

எதிரில் அமைந்துள்ளது.

அனைவரும் வாரீர்.


ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் 176 வது குருபூஜை-நிகழ்ச்சி நிரல்

|


176-வது குருபூஜை-நிகழ்ச்சி நிரல்











சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு

நாடகத்தை தவறாமல் பாருங்கள்.


அத்துடன்  கிங்-பைசல் அவர்களின்

சிவன் - சக்தி நாட்டியத்தை கண்டு

களியுங்கள்.

நான்  கிங்-பைசல் அவர்களின் 

சிவ-தாண்டவ நடனத்தை கண்டு மெய்

மறந்து போய் விட்டேன். அவ்வளவு

அற்புதமான கலைஞர். சிவனையே

நேரில் காண்பது போல் இருக்கும்.

அவ்வளவு அருமை. வார்த்தைகளால்

எழுத முடியவில்லை என்னால்.

நீங்களே பாருங்கள். அவரின் ஈடுபாடு புரியும்.



சற்குரு ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகளின் குருபூஜை விழா அழைப்பு

|


     சற்குரு ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள்-176 வது குரு பூஜை




                


நிகழும் விஜய வருடம் வைகாசி மாதம்

15-ம் நாள் ( 29-05-2013) புதன்கிழமை அன்று
மகா ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளுக்கு 
குருபூஜை விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு
செய்ய்ப்பட்டுள்ளது.
மெய்யன்பர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொண்டு குருவருளை பெற்று வாழ்வில்
எல்லா நலனும் பெற்று இன்புறுமாறு
வேண்டிக் கொள்கிறேன். 

சற்குரு ஸ்ரீ நவபாஷான சுவாமிகள்

|

             ஸ்ரீ நவபாஷான சுவாமிகள்






               சற்குரு ஸ்ரீ நவபாஷாண சித்தர்




       புதுவையை அடுத்த வில்லியனூர், ஒழுந்தியாபட்டு என்ற ஊரில் மெடிமிக்ஸ் கம்பனிக்கு எதிரிலுள்ள வீதியில், 2 கி.மீ, தொலைவு சென்றால் சந்திக்குப்பம் (கிளிஞ்சிக்குப்பம் அருகில், கடலூர் மாவட்டம் ) என்ற ஊர் உள்ளது. அவ்வூரிலிருந்து தெற்கு நோக்கி சென்றால்-விவசாய நிலத்திற்கு இடையில் ஸ்ரீ நவபாஷாண சித்தர் சமாதி உள்ளது.

       ஸ்ரீ உமாமகேஸ்வரர் அறக்கட்டளையின் பெரு முயற்சியால் இக்கோயிலில் -புனரமைப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
             
              இச்சித்தரின் வரலாறு பற்றிய தகவல்களை தொகுத்து விரைவில் வெளியிடப்படும்.



ஸ்ரீ கந்தசாமி தேசிகர் சித்தர்

|

          சித்தர் ஸ்ரீ கந்தசாமி தேசிகர்



            


                  ஸ்ரீ கந்தசாமி தேசிகர்


          புதுவை, நெட்டப்பாக்கம் என்ற ஊரில் சற்குரு ஸ்ரீ கந்தசாமி தேசிகர் சமாதி கொண்டுள்ளார்.
           நெட்டப்பாக்கத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு போகும் வழியில்-அரசாங்க பள்ளி அருகில் அமைந்துள்ளது இவருடைய ஜீவசமாதி.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கந்தசாமி தேசிகர் என்ற இச்சித்தர் இப்பகுதியில் இறைவனைப் பற்றிய ஆனந்தத்திலேயே வாழ்ந்து வந்தார். அப்பகுதி மக்களின் இன்னல்களை நீக்கி இன்னருள் புரிந்து வந்தார்.
                 சுவாமிகள் மறைந்தவுடன் அவருடைய சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஊர்மக்கள் வழிபட்டு வந்ததாக பெரியோர்கள் கூறுவர்.
பெருமை வாய்ந்த அவருடைய சமாதி பீடம்-ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் சிதிலமடைந்து விட்டது. இதனை கண்ணுற்ற அவ்வூர் சிவனடியார்கள் பெரிதும் முயற்சி செய்து ஊர்மக்களின் உதவியுடன் அத்திருக்கோயிலை மறுபடி சீர் செய்யும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அத்துடன் வியாழன் தோறும் தேவார- திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து மிகச் சிறப்பாக வழிபாடு செய்து வருகின்றனர்.

இதில் பெருமைக்குரிய-மிகவும் போற்றுதற்குரிய செய்தி அச்சிவனடியார்கள் அனைவரும் மிகவும் இள வயதினர்.



             வாழ்க அவர்கள் திருத்தொண்டு-
                                      சிறக்க அவர்கள் பணி.

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-மதுரை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்


ஜீவசமாதிகள்-மதுரை

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-தஞ்சாவூர்

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-கும்பகோணம்,தஞ்சாவூர்


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சிதம்பரம்

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்- சிதம்பரம்


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-அருப்புக்கோட்டை

|


தமிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்-அருப்புக்கோட்டை


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-திருவண்ணாமலை

|

மிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்

திருவண்ணாமலை



தமிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்-வேலூர்

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்


ஜீவசமாதிகள்-வேலூர்

தமிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB