|

ஸ்ரீ குள்ளச்சாமியின் புகழ் பாடும் பாரதி

|


ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 

அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 

யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''என்றேன்.
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 

தேசிகன் கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்
தெரிவதுபோல் உனக்குள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

தமிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் சீவசமாதிகள்-காஞ்சிபுரம்

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்


ஜீவசமாதிகள்-காஞ்சிபுரம்

|  இன்று 19-06-2010 சனிக்கிழமை ஸ்ரீ குரு அக்கா சாமி சித்தரின்

140 வது குரு பூஜை. 

பக்தர்கள் அனவரும் அவரின் பொற்பாதங்களை

வணங்கி ஆசி பெற்றுக் கொள்வீர்களாக. 

108 சித்தர் போற்றி

|

                                                            108 சித்தர் போற்றி


ஓம் நந்திதேவர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்திய முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலத்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகள் போற்றி-5  
ஓம் திருஞான சம்பந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் அப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் ஓளவையார் திருவடிகள் போற்றி
ஓம் சேந்தனார் திருவடிகள் போற்றி-10
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி-15
ஓம் புலத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சனகர் திருவடிகள் போற்றி
ஒம் சனந்தனர் திருவடிகள் போற்றி
ஒம் சனற்குமாரர் திருவடிகள் போற்றி-20
ஒம் சனாதணர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் காக புசுண்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பத்ரகிரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி-25
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி-30
ஓம் போகர் மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கொங்கண மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கி நாதர் திருவடிகள் போற்றி-35
ஓம் அழுகண்ண மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்து அடிகள் திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டி சித்தர் திருவடிகள் போற்றி-35
ஓம் தேரையர் மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டை நாதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி-40
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினி தேவர் திருவடிகள் போற்றி
ஓம் சிதம்பர சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ரமண மகரிஷி திருவடிகள் போற்றி-45
ஓம் ராம் சுரத் குமார் திருவடிகள் போற்றி
ஓம் மகான் சேஷாத்திரி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ராகவேந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் கழுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி-50
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நறுமணச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் ராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி-55
ஓம் சாம்பசிவம் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்த சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவப்பிரகாச யோகி திருவடிகள் போற்றி
ஓம் சீரடிசாய்பாபா திருவடிகள் போற்றி
ஓம் சித்ரமுத்த அடிகள் திருவடிகள் போற்றி-60
ஓம் குரு தஷிணாமூர்த்தி சுவாமிகள் திருவடிகள் போற்றி 
ஓம் பாலானந்த ஜோதிசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப் பிள்ளைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவபாலயோகி திருவடிகள் போற்றி-65
ஓம் கணபதி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் உரோம மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணிய சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஏனாரிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் காரைச்சித்தர் திருவடிகள் போற்றி-70
ஓம் சங்கிலிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூசலார் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுருளிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவஞான பாலச் சித்தர் திருவடிகள் போற்றி-75
ஓம் சிவஞான பாலைய சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தொள்ளைக்காது சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் மௌலா சாஹிப் மெய்ஞானி திருவடிகள் போற்றி
ஓம் அழகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி-80
ஓம் சித்தானந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சக்திவேல் பரமானந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ராம்பரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் பவழங்குடி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் மகான் படே சாஹிப் திருவடிகள் போற்றி-85
ஓம் அரவிந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அன்னை திருவடிகள் போற்றி
ஓம் கம்பளி ஞான தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் பெரியவர்க்கு பெரியவர் திருவடிகள் போற்றி
ஓம் ல‌ஷ்மண சுவாமிகள் திருவடிகள் போற்றி-90
ஓம் மண்ணுருட்டி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அக்கா பரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் நாராயண பரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி 
ஓம் யாழ்ப்பானம் கதிர்வேல் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தேங்காய் சுவாமிகள் திருவடிகள் போற்றி-95
ஓம் குருசாமி அம்மாள் திருவடிகள் போற்றி
ஓம் அம்பலத்தாடப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் வண்ணாரப் பரதேசி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் மௌலா சாஹிப் சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சடையப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி-100
ஓம் நாகலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் கோவிந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சட்டி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் சந்தானந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி-105
ஓம் கணபதி சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் வியோமா சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ஞானகுரு குள்ளச்சாமிகள் திருவடிகள் போற்றி-108
                        ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள்


                                                          போற்றி போற்றி
                         

|

ஓம் ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகளின் சித்த பீடம்


|


ஸ்ரீ அம்பலத்தாடும் சுவாமிகள் ஜீவசமாதி
|

பவளக்கொடி சித்தர் சுவாமிகள் சித்த பீடம்

|

ஓம் ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்த பீடம்
ஸ்ரீ குருசாமி அம்மையார்

|


ஸ்ரீ சடையத்தம்மாள் ( எ )  குருசாமி அம்மையார்
ஓம் ஸ்ரீ சடையத்தாயாரம்மாள் சுவாமிகள்


ஞானபூமியாம்-புதுவையை நாடி வந்த எண்ணற்ற
யோகிகளுல் பெண்சித்தராம் ஸ்ரீ குருசாமி அம்மையாரும்
ஒருவர். இவர் வடமாநிலத்தில் இருந்து புதுவைக்கு
ஆன்ம விடுதலைக்காக வந்திருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. இறைவனின் அருள் நாடி,
தவத்தில் ஈடுபட பல ஸ்தலங்களுக்கும் சென்று
கடைசியில் புதுவையை வந்தடைந்து-இச்சித்த பூமியே
தான் தேடிய தவச்சாலை என உணர்ந்து இப்புதுவையில்
தங்கி விட்டார். இவருடைய காலம் 1890-களாக
இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில்
அரியூர் என்னும் சிற்றூரில் சர்க்கரை ஆலைக்கு
மேற்கில் இவருடைய ஜீவசமாதி அமைந்துள்ளது.


.புதுவையின் சூழலும், அமைதியும் அம்மையாருக்குப்
பிடித்துப் போக.. அரியூரிலுள்ள ஒரு தோட்டத்து
மரத்தடியில் தங்கி விட்டார். பசியைப்
பற்றிக் கவலை கொள்ளாமல், சதாகாலமும்
தியானத்திலேயே இருப்பார். இதை கவனித்த
அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து
கொடுத்து அவரை அன்போடு கவனித்துக் கொண்டனர்.
நாளடைவில் அம்மையாரிடம் அருட் சக்தி இருப்பதை
உணர்ந்து அவரை தஞ்சம் அடைந்தனர்..
தங்களுக்குள்ள மனக் குறைகளை அம்மையாரிடம் 
கொட்டுவார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் 
புன்னகையுடன் கேட்டுக் கொண்டு, ஆசி புரிந்து அனுப்பி 
வைப்பாராம். அவர்களும் நிம்மதியுடன் வீடு
திரும்புவார்கள் பக்தர்கள்  தங்கள் வியாதிகளை
தெரிவிக்க அதையும் அவர் தீர்த்து வைப்பாராம்.

அம்மையாரின் உண்மைப் பெயர் யாரும்
அறிந்ததில்லை. அவருடைய நீளமான கூந்தலின்
வளர்ச்சி கண்டு அவரை “சடையம்மாள்” என்றும்
”சடையத்தாயாரம்மாள்” என்றும் அன்போடு
கூறுவார்கள்.

குருசாமி அம்மையார் சாதாரணமானவரா..
இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம்
வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்து வந்த
சில நாட்களிலேயே தங்களது குறைகள் அகலப்
பெற்றனர். அதன்பின் அம்மையாருக்கு நன்றி
தெரிவிக்கும் பொருட்டு, இவரது இருப்பிடம் தேடி
வணங்கிச் செல்வார்கள். அப்படி வருபவர்களில்
பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின்
தியானமும் அருட்பணியும் தடைபடாமல்
இருப்பதற்காக, போதிய இட வசதியை அவருக்கு
ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் சிலர்
நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் 
பெயருக்கு எழுதிக் கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.சித்த புருஷர்கள் என்றால், அவர்களின் செயல்பாடுகளும் 
வித்தியாசமாக இருக்கும். அதுபோல், குருசாமி
அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.
அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல்
முழுக்கக் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து
உடல் மேல் பூசிக் கொண்டு, சற்று நேரம்
ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக்
குளிப்பது வழக்கமாம். எப்படி இறங்குவார் என்பது
எவருக்குமே தெரியாதாம். கிணற்றுக்குள் இருக்கும் 
அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்க கூடாதாம்.
அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி,
அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.
அவரது  நீண்ட தலைமுடி கிணற்றின் நீர்ப் பரப்பு
மேல் படர்ந்து இருந்தது. அவரைக் காணவில்லை
என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார்
என்பதும் எவருக்கும் தெரியாது. தரைக்கு வந்தவுடன் 
அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது
அவரது ஈரமான நீண்ட தலைமுடியில் இருந்து சிதறும்
நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெரிக்கும். அந்த
நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன்
பலரும் அம்மையாரை நெருங்குவார்களாம். நீர்த் துளிகள் 
பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் 
பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்
.இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி 
அம்மையாரின்  உருவச் சிலைக்கு மிளகாய் அரைத்து 
அபிஷேகம் செய்யும் வழிபாடு நடந்து வருகிறது..

மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய
வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து
எடுத்து வரக்கூடாது. இப்படி அரைத்துக் கொடுத்த
பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும்.போது
இதை உடலில் பூசிக்கொண்டு சிரித்த
முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி
வழங்குவாராம் அம்மையார்.
அம்மையாரின் அபிஷேகத்திற்கு பெண்கள் மிளகாய் 
அரைக்கும்போது  என்ன பிரார்த்தித்தாலும்,
கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்பது
நம்பிக்கை.
அம்மையார்  ஒரு சித்திரை மாதம் பவுர்ணமி
தினத்தன்று அம்மரத்தடியிலேயே சமாதி அடைந்ததாக
கர்ண பரம்பரை செய்தி சொல்கிறது.

அதன்பிறகு அவரைப் பற்றிய சரியான தகவல்
இல்லை. அச்சமாதியையும் கவனிப்பார் இல்லை.
அந்த இடம் தமிழக-புதுவை எல்லையாக இருந்த
படியால், இரு ராணுவத்தினரும் யாரையும்
அப்பகுதியில் தங்க அனுமதிக்கவில்லை.
அதனால், அம்மையாரின் ஜீவசமாதியையும்
யாரும் பராமரிக்க இயலாமல் போனது.சில ஆண்டுகளுக்கு பின், நடராஜ சுவாமிகள்
என்னும் அடியார் தஞ்சாவூரிலிருந்து
திருத்தல யாத்திரையாக புதுவை வந்தார்.
 புதுவையில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி அமைந்துள்ள கோவிலில்
அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
அவரின் ஆழ்ந்த தியானத்தின் பலனாக
ஒரு குரல் அவரை குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதி இடத்திற்கு சென்று பணி
செய்யுமாறு பணித்தது.
ஐயனின் கட்டளையை சிரமேற் கொண்டு
அரியூருக்கு விரைந்தார். அம்மையார் வாழ்ந்த
தோட்டம் முழுதும் புதர் மண்டிப் போய் கிடந்தது.
அப்புதரினுள் அம்மையாரின் சமாதியை தேடி
கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.
அம்மையாரை நினைவில் இருத்தி தியானத்தில்
ஆழ்ந்தார். அம்மையாரும் நடராஜ சுவாமிகளுக்கு
காட்சி கொடுத்து தன் இருப்பிடத்தை உணர்த்தி
மறைந்தார்கள்.
நடராஜ சுவாமிகள் குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதியை வெளிக்கொணர்ந்து இவ்வுலகுக்கு
அறிவித்தார். தன் கடன் இனி அம்மையாருக்கு
பணி செய்து கிடப்பதே எனத் தெளிந்து, பணி
செய்து வரலானார். அம்மையாருக்கு அக்காலத்தில்
பொதுமக்கள் கொடுத்த சொத்துக்களை மிகவும்
சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடித்து- அவற்றைக்
கொண்டு கல்வி, அன்னதானம், தினசரி வழிபாட்டுச்
செலவுகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
1970-ம் ஆண்டு நடராஜ சுவாமிகள் காலமானார்.
அவருக்குப் பின் அத்திருக்கோவிலை தமது
சீடரான சீதாராமை கொண்டு நடத்தி வர
பணித்தார். இந்த இரு அடியார்களின் சமாதிகளும் குருசாமி
அம்மையாரின் சமாதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.
அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக்
கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை
மாதம் பவுர்ணமியன்று மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது. 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB