|

சித்தர்களின் ஜீவ சமாதி பீடமே கலியுகத்தில் வணங்கத்தக்க
இடமாகும்.ஏனெனில்,பிரபஞ்ச ஆற்றலை (இறைசக்தியை)
இப்பூமியில் நிரந்தரமாக நிலைப்படுத்தி வைத்துள்ள இடமே
சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களாகும்.

தற்போது உள்ள பழங்கோவில்கள் எல்லாம் சித்தர்களின்
மறைவிடங்களே.அவர்களின் ஜீவசமாதி மீது தான் புகழ் பெற்ற
கோவில்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.அவர்களின்
ஆற்றலே அங்கு பிரகாசிக்கிறது.

திருமலை திருப்பதி - சித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்


சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கினால் ஆண்டவனை
வணங்கியதாகும். ஆண்டவனை வணங்கினால் அவர்களை
வணங்கியதாகும். அங்கு சென்று ஊணுருக, உயிருருக,விழி கசிய தியானிப்போர்க்கு அப்பீடத்தில் குடி கொண்டிருக்கும்
சித்தர் பெருமக்கள் தாம் பெற்றுள்ள பேராற்றலால் பக்தர்கள்
குறையை போக்கி,நல்வழி அருளுகிறார்கள்.
இது முற்றிலும் உண்மை.

அனைத்திற்கு அப்பாலும், அனைத்திலுமாய் நின்று இப்பிரபஞ்சங்களை
தம் விருப்பம் போல் படைத்து-இயக்கும் பரம்பொருள், ஞானிகளின்
உள்ளே நடம் புரிகிறார்.

சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர்.


ஞானிகளை சத்திய நிலையில் தெளிந்தறிதலினால் பரம்பொருளை
அறிய முடியும். பரம்பொருளை அறிந்துணர சித்தர்களின்
ஜீவசமாதியை பூஜிக்க வேண்டும்.

புண்ணிய பூமி, வேதபுரி என காலங்காலமாக,அகத்தியர்
முதல் அரவிந்தர் வரைஅனைவரையும் அரவணைத்து அவர்களின்
அருள் சாதகத்திற்கு,இறை சாதகமாக்கிய நம் புதுவை
மண்ணில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர்கள் அநேகபேர்.
அவர்களில் பிறமதத்தினரும் உண்டு என்பதுவும் நம்
மண்ணின் பெருமை.

இவ்விதம் நமக்கு தெரிந்தும் இன்னும் தெரியாத பல
சித்தர்கள் உலவி,தம் அருள் ஆற்றலால் புண்ணியமாக்கிய
பூமிதான் நம் புதுவைமண்.இப்படி புதுவையிலும் அதை
சுற்றியுள்ள பிற இடங்களிலும் உள்ள சித்தர்களின் ஜீவ
பீடத்திற்குச் சென்று வழிபட்டு அவர்களின் பேரருளை
பெறுவோமாக..




2 comments:

தேவன் சொன்னது…

என் நெருங்கிய சகோதரரும் நண்பருமாகிய சௌந்தர் அண்ணன் அருகிலே இருக்கும் போது உங்களது வலைப்பதிவை நோட்டமிட்டோம்.

//// சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர். ////



இந்த பாடல் இருவருக்கும் ஏதோ சேதி சொன்னது.

நன்றி உங்களுக்கு!

பித்தனின் வாக்கு சொன்னது…

திருமலை திருப்பதி - சித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்


ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் சட்டைமுனி சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். நன்றி.

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB