சித்தர் ஸ்ரீ கந்தசாமி தேசிகர்
ஸ்ரீ கந்தசாமி தேசிகர்
புதுவை, நெட்டப்பாக்கம் என்ற ஊரில் சற்குரு ஸ்ரீ கந்தசாமி தேசிகர் சமாதி கொண்டுள்ளார்.
நெட்டப்பாக்கத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படும் ராமலிங்கேஸ்வரர்
ஆலயத்திற்கு போகும் வழியில்-அரசாங்க பள்ளி அருகில் அமைந்துள்ளது இவருடைய ஜீவசமாதி.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கந்தசாமி தேசிகர் என்ற இச்சித்தர் இப்பகுதியில் இறைவனைப் பற்றிய ஆனந்தத்திலேயே வாழ்ந்து வந்தார்.
அப்பகுதி மக்களின் இன்னல்களை நீக்கி
இன்னருள் புரிந்து வந்தார்.
சுவாமிகள் மறைந்தவுடன் அவருடைய சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஊர்மக்கள் வழிபட்டு வந்ததாக பெரியோர்கள் கூறுவர்.
பெருமை வாய்ந்த அவருடைய சமாதி பீடம்-ஆங்கிலேயர்
காலத்திற்குப் பின் சிதிலமடைந்து
விட்டது. இதனை கண்ணுற்ற அவ்வூர் சிவனடியார்கள் –பெரிதும் முயற்சி செய்து ஊர்மக்களின் உதவியுடன் அத்திருக்கோயிலை மறுபடி சீர் செய்யும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
அத்துடன் வியாழன் தோறும் தேவார- திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து மிகச் சிறப்பாக வழிபாடு செய்து வருகின்றனர்.
இதில் பெருமைக்குரிய-மிகவும் போற்றுதற்குரிய
செய்தி அச்சிவனடியார்கள் அனைவரும் மிகவும் இள வயதினர்.
வாழ்க அவர்கள் திருத்தொண்டு-
சிறக்க அவர்கள் பணி.
0 comments:
கருத்துரையிடுக